காதல் எனும் நாவலின் முதல் அத்தியாயம் என்னுள் துவங்குகிறது

கைகோர்த்து நாம் நடந்த
மாலைப் பொழுதுகள்
கவிதையாய் என்னுள் நடக்கிறது !

கையசைத்து நீ விடை பெறும் போது
கவிதை என்னுள்
ஓய்வு கொள்கிறது !

விழியசைத்து புன்னகையில் இதழசைத்து
மாலைத் தென்றலில் இடையசைத்து நீ மீண்டும் வரும் போது
துயில் கலைந்து கவிதை என்னுள்
துள்ளி எழுகிறது !

பொய் எழுதும் கவிஞனை மெய்யணைத்து
புன்னகையில் அன்பாய் நீ பார்க்கும் போது
காதல் எனும் நாவலின் முதல் அத்தியாயம்
என்னுள் துவங்குகிறது !

எழுதியவர் : கவின் சாரலன் (16-Sep-22, 9:42 am)
பார்வை : 70

மேலே