ஆசிரியர் தினம் 05092022

அப்போது நான்
படிக்கிறேன் ஏழாம் வகுப்பு..
வயது பன்னிரண்டு.. நான்
அரசுப் பள்ளியில் மகாகவி
பாரதியார் அணி...

டிஇஓ இன்பெக்ஷனில்
டிஇஓ கேட்கிறார்...
டாக்டர் ராதாகிருஷ்ணன்
யார் என்று.. அந்த
அணி மாணவர்களிடம்...

அவர்களால் சொல்லத்
தெரியவில்லை. வேறு
யாருக்காவது தெரியுமா
என்று அதிகாரி கேட்க நான்
கை தூக்கி எழுகிறேன்...

டாக்டர் ராதாகிருஷ்ணன்
முன்னாள் குடியரசுத் தலைவர்...
அதற்குமுன் அவர் ஒரு ஆசிரியர்..
பல்கலைக்கழக துணை வேந்தர்...
சோவியத் யூனியனுக்கு
இந்தியாவின் தூதர்...
இன்னும் பல அழகிய
பதவிகளை அலங்கரித்தவர்..

வாழும்போதே பாரதரத்னா
பட்டம் பெற்றவர்...
அவரது பிறந்தநாளை
*ஆசிரியர் தினமாகக்*
கொண்டாடுகிறோம் என்றேன்.

டிஇஓ என்னைப் பாராட்டினார்..
இந்தப் பையன் யாரென
வகுப்பாசிரியரிடம் வினவ
பட்டன் ஆசிரியரின் அண்ணன்
மகன் என்றார் அவர்...

உனக்கு மட்டும் பதில்
எப்படி தெரிந்தது..
வினவினார் மாவட்டக்
கல்வி அதிகாரி.. வாத்தியார்
சித்தப்பாவின் அறிவுரையில்
தினத்தந்தி தினமும்
படிக்கிறேன் என்றேன் நான்..

கல்லூரிப் படிப்பு முடித்தேன்..
பாலிடெக்னிக் கல்லூரி
ஆசிரியர் ஆனேன்.. அது
ஒரு நந்தவன சந்தோசம்..
இதயத்தில் இன்றும் நேசம்..

பள்ளி.. அது நினைவுப்
பூக்களின் இன்னொரு தேசம்...
இப்போதும் தரும் இனிய வாசம்.

அந்த சுகந்த நினைவுகளுடன்
ஆசிரியர்கள் அனைவருக்கும்
*ஆசிரியர் தின வாழ்த்துகள்..*

எழுத்தறிவித்தவன் இறைவன்
இது ஆன்றோர் வாக்குமூலம்..
ஆசிரிய சமூகம்... அது
அறிவுசார் சமுதாயத்தை
உருவாக்கும்... உலகம்
புதியதோர் உலகம் என
என்றென்றும் வாழும்.. வளரும்..
*வசந்த வாழ்த்துகள்...*

அன்புடன்...
ஆர்.சுந்தரராஜன்...

😀💐👍🪷🙏🌷👏🌹

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (17-Sep-22, 2:56 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 104

மேலே