குந்தவை வந்தியத்தேவன்
குந்தவை... வந்தியத்தேவன்...
சந்திப்புகள்.. உரையாடல்களில்..
கதாசிரியர் கல்கி...
தன் பேனாவில்
மை ஊற்றி எழுதினாரா.. காதல்
மது உற்றி எழுதினாரா...
இருவரும் சேர்ந்து
ஜொலிக்கும் பக்கங்கள்
படிக்கும் மதுப்பிரியர்கள்
இனி இங்கு டாஸ்மாக்
மறந்துதான் போவார்கள்..
பொன்னியின் செல்வனின்
இந்தத் தாள்கள்...
கஞ்சா கேஸ்கள் குறைக்கும்
எழுத்துகளின் வயல்கள்...
சர்க்கரைப் பந்தலில்
தேன்மழை பொழியும்...
பூக்களின் வாசம்
சந்தன வாசம் கை
குலுக்கிப் போகும்...
அழகில் கம்பீரம் திரட்டி
வைத்த குந்தவை பிராட்டி..
சரித்திர வீரன்
சாகசக்காரன் வல்லவரையன்..
வந்தியத்தேவன்..
காதல் தேன் தடவிய
சம்பாஷணை விசா.. அது
இழுத்துச் செல்லும்
இன்னொரு கைலாஸா...
😀🪷🌹👍