செல்வ கணேசன் 07092022

நண்பன் செல்வகணேசன்..
ஜிஸிஇ திருநெல்வேலி
பிட்ஸ் பிலானி என இவனது
பொறியியல் ராஜாங்கம்
பெரியது... மிக இனியது...

புத்தகங்களின் பக்கங்கள்
இவனுக்கு.. படிக்க படிக்க
வரும் சொர்க்கங்கள் ஆனது..

பாளையங்கோட்டை.. இவனது
தலைநகரம் பிறந்து
திருச்சி மலைக்கோட்டை
பொன்னி நகரம் வாழும்
நடமாடும் பொறியியல்
பல்கலைக் கழகம்
நண்பன் செல்வகணேசன்..

என்றென்றும் வளமோடும்
நலமோடும் நீடூழி வாழ
பிறந்தநாள் வாழ்த்துகள்...

சின்ன பத்திக்குள் அடங்காது 
செல்வகணேசனின் பெருமை... 
அவனது மனப்பாங்கு 
அவனது கையெழுத்து
போன்றே மிக அழகானது... 

இன்று பேராசிரியராய் 
அவனிடமுள்ள முதிர்ச்சி 
அன்று கல்லூரி மாணவராய் 
இருந்தபோதும் இருந்தது... 

அரசு வேலைக்கு நிறையபேர்
டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்
எழுதி எழுதி தேர்வுத்
தவமிருந்த காலங்களில்
அரசுப் பொறியாளர் இவன்
திறமைகளின் விசாலத்தில் 
வேலைகளின் விலாசம் மாற்றியவன். 

இவன் மேற்படிப்புக்குச் சென்று 
பணிபுரிந்தது மலேசிய நாடு..
அதிக ஊதியம் புறந்தள்ளி  
இனிதாய் பணிபுரிவது 
இந்திய தாய்த்திருநாடு..
அதிலும் இனிய தமிழ்நாடு... 
எல்லோர்க்கும் சொல்வேன் 
அதையே நீ நாடு... 

நண்பன் செல்வகணேசன்...  
முப்பத்தாறு வருட 
அனுபவம் கொண்ட 
இருபத்தோரு வயது இளைஞன்..

சென்ற புதன்கிழமை...
விநாயகன்.. ஆனைமுகன்
கணேசன் பிறந்தநாள்...
இந்த புதன்கிழமை
அன்பன்... நண்பன்
செல்வகணேசன் பிறந்தநாள்..
பிள்ளையார்.. கணபதி
அருள் புரியட்டும்..

கண்களில் இன்று
ஓணம்... வர்ண ஜாலங்கள்..
மனதினில் மகிழ்வுடன்
செல்வகணேசனுக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துகள்..

அன்புடன்... 
ஆர்.சுந்தரராஜன். 
😀👍🎂🍇🍎🍏🌹🌷🌺🪷

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (16-Sep-22, 5:39 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 83

சிறந்த கவிதைகள்

மேலே