அடுப்புக் கரியா ஆட்டுக் கறியா

எனக்கு முதல் மகப்பேறிலே அழகான பெண் குழந்தை பிறந்தது. குடும்ப சோதிடரைப் பார்த்து குழந்தை பிறந்த நாள், தேதி, நேரம் ஆகியவற்றைக் கூறினோம்.
*******
கணித்துச் பார்த்த சோதிடர் குழந்தையின் ராசிப்படி 'கரிமா' (Garima) என்ற பெயரை வைக்கப் சொன்னார். பின்னர் எண்கணித சோதிடரைப் பார்த்தோம். அவரும் அதே பெயரை வைக்கப் சொன்னார். இருவருமே ராசியான பெயர் என்றனர். ஆனால் பெயரின் பொருளைக் கூற மறுத்துவிட்டனர். என்ன காரணமோ?
@@@@@@@
ஊரிலுள்ள பலருக்கு மட்டுமல்ல எங்களுக்குமே எங்கள் குழந்தையின் பெயரைத் தமிழில் 'கரிமா' என்று எழுதுவதா? 'கறிமா' என்று எழுதுவதா என்று தெரியவில்லை. இது சமஸ்கிருதப் பெயராம். பெயரின் பொருளும் உச்சரிப்பும் தெரிந்தவர்கள் கூறுங்களே.
@@@@@@@
தமிழ்ப் பெயர்களைத் தவிர்ப்பதே தற்காலத் தமிழரின் நாகரிகம். நாங்களும் ஊரோடு ஒத்துப் போகிறோம். இது தவறா?
@@@@
இருந்தாலும் சிலர் நக்கலாக "அடுப்புக் கரியா? ஆட்டுக் கறியா?" என்று கேட்கும் போது மனம் வலிக்கிறது. என்ன செய்வது?
பெற்ற பிள்ளைக்குத் தமிழ்ப் பெயரை வைத்தால் தமிழ் ஆசிரியர்கள் சிலரே தமிழ்ப் பெயருள்ள பிள்ளைகளை ஒரு மாதிரியாக அவர்கள் பெயர்களைக் கிண்டல் செய்வது போல் பேசுவதாகக்
கேள்விப்பட்டோம்.
@@@@@
தாய்மொழியில் பெயர் வைப்பது தவறா?
@@@@@@@##@###@@@@#@#@#@#@@@@@
Garima = Prowess, honour, strength, warmth.
Sanskrit feminine name.