வலைதளம்

வலைதளத்தில்
உன் வருகைக்காக
காத்திருக்கும்
விழிகளின் தேடல்
விரல்களைத் தேய்க்கிறது.

வலையில்
இருந்து வழுகிய
அடுத்த நிமிடம்
வந்திருப்பாயா.....
வளையும் குறியோடு
மீண்டும் வலைக்குள்
மனம் விழுகிறது.

அழைக்க எத்தனிக்கும்
உதடுகளை
தூக்கம் கலையும் என
காலம் ஒட்டிவிடுகிறது.

வானூர்தி சென்ற தடமாய்
வடிவிழந்து
கலைகிறது
இரவின் இருள்
விடியலாய்...

எழுதியவர் : K.நிலா (19-Sep-22, 12:15 am)
சேர்த்தது : Kநிலா
பார்வை : 344

மேலே