தடுமாற்றம்

தூரிகை கொண்டு
வடித்த ஓவியம் போல்
நாணம் கொண்டு
நீ நடந்து வர...

உறங்கி கொண்டு இருந்த
எனது எழுது கோலும்
துயிலதனை துறந்து
துள்ளியெழுந்து விட்டது
உன்னை வர்ணித்து
வார்த்தைகளை வடித்திட...

ஆனா..எழுது கோலோ
உந்தன்
அழகினில் மயங்கி
வார்த்தைகளோடு
போராட்டம் செய்தது
எந்தன்
மனதிலும் தடுமாற்றம்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (28-Sep-22, 9:47 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : TADUMATRAM
பார்வை : 289

மேலே