கொடுப்பவர் கொடையினும் இரப்பவர் கொடை யேற்றமாம் – அறநெறிச்சாரம் 178
நேரிசை வெண்பா
பரப்புநீர் வையகத்துப் பல்லுயிர்கட் கெல்லாம்
இரப்பாரின் வள்ளலும் இல்லை - இரப்பவர்
இம்மைப் புகழும் இனிச்செல் கதிப்பயனும்
தம்மைத் தலைப்படுத்த லால் 178
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
இரப்பவர் இம்மையிற் புகழையும் மறுமையில் இன்பத்தையும் ஈவோருக்கு உதவுதலால், கடல் சூழ்ந்த உலகில் உள்ள எல்லா மக்களுயிர்கட்கும் இரப்பார் போன்ற சிறந்த வள்ளல்கள் பிறரிலர்.