ஊண் கொடையே உயர்ந்த கொடையாம் – அறநெறிச்சாரம் 177

இன்னிசை வெண்பா

வாழ்நா ளுடம்பு வலிவனப்புச் செல்கதியும்
தூமாண் நினைவொழுக்கங் காட்சியும் - தாமாண்ட
உண்டி கொடுத்தான் கொடுத்தலால் ஊண்கொடையோ(டு)
ஒன்றுங் கொடையொப்ப(து) இல் 177

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

மாட்சிமைப்பட்ட உணவினைக் கொடுத்தவன் ஆயுள், உடல்வலிமை, அழகு, மறுமைப்பயன், தூயசிறந்த எண்ணம், ஒழுக்கம், நற்காட்சி முதலியவற்றையும் அவ் வுணவு வாயிலாகக் கொடுப்பதால் பசித்தவர்கட்கு உணவு கொடுத்தலோடு ஒத்த கொடை வேறொன்றும் இல்லை.

குறிப்பு: உண்ணப்படுவது ஊண்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Oct-22, 7:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

சிறந்த கட்டுரைகள்

மேலே