பணியாளர் தம்மை அரவணைத்துச் செய்தால் வெற்றிதொலை வில்லையே - ஆசிரிய விருத்தம்

உண்மைதான் நண்ப கவின் சாரலன்; ஒன்பதிந்சீர் ஆசிரிய விருத்தம் எந்த இலக்கியத்திலும் கிடையாது! ஏதோ எனையறியாமல் தோன்றியதை நான்கடிகளிலும் ஒரே வகையான சீர்களை வைத்து எழுதிவிட்டேன்,
இதில் 1. 7 சீர்களில் மோனை வைத்து எழுதி விட்டேன்.

இப்பாடலையே மேலும் சீராக்கி 1. 6 சீர்களில் மோனை வைத்து எழுதிப் பதிவிடுகிறேன். ஒவ்வொரு அடியிலும் 5 சீர்கள் முன் அரையடியாகவும், 4 சீர்கள் பின் அரையடியாகவும் அமையும்; வாசிக்கச் சிறப்பாகவும் இருக்கும்.

ஒன்பதிந்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா காய் மா காய் மா / காய் மா காய் விளம்)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
(1, 6 சீர்களில் மோனை)

செல்லும் வழியதனில் அகலத் திறக்கும்,நீள் கதவும்
..சேர்ந்திருக்கும் அதனின் சக்திவேறாய் இருப்பினும்
வெல்லும் வாழ்வதனில் விரைந்தே முன்னேற வேண்டும்
..விருப்புடனே விளங்கும் ஆன்மபலத் துணையுடன்
ஒல்லும் நேர்மையுடன் நேர்செல் வழி,திறமை வெற்றி
..உயர்வினையே பாங்காய் ஏற்றமென உய்விக்கும்;
நல்ல பணியாளர் தம்மை அரவணைத்துச் செயலை
..நயமுடனே செய்தால் வெற்றிதொலை வில்லையே!

– வ.க.கன்னியப்பன்

இலக்கியங்களில் 12 சீர், 16 சீர் அபூர்வமாய் வருவதுண்டு. நேற்று முகநூலில் என் நண்பர் கவிஞர் செகவான் 16 சீர் விருத்தம் அனைத்தும் காய்ச்சீர்களால் அருமையாக எழுதிப் பதிவிட்டிருக்கிறார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Oct-22, 9:38 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே