சரஸ்வதித் தொழுகை

சரஸ்வதித் தொழுகை பாரதியார்
அகவற்பா
வெள்ளைத் தாமரைப் பூவி லிருப்பாள்
வீணை செய்யும் ஒலியி லிருப்பாள்
கொள்ளை யின்பம் குலவுக் கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்
உள்ள தாம்பொருள் தேடி உணர்ந்தே
ஓதும் வேதத்தி னுள்நின் றொளிர்வாள்
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
அருமை வாசகத் துட்பொருள் ஆவாள்
...
...