கலைவாணி துதி

வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்ப பவளே
கள்ளமில்லா யோகிகள் நிஷ்டையில் நித்தியம்
வந்த அமர்ந்து ஆசிதரும் அன்னையே
வேதவினோதினி நான்முகன் தேவி கலைவாணி
உந்தன் கழல் துணை யம்மா
கற்பகத் தருவே கனகவல்லி நீதான்
எந்தன் சிந்தையில் மண்டிக்கிடக்கும் அறியாமை
இருளெல்லாம் நீக்கி எண்ணிலா ஆயிரம்
நிந்தன் சுடரொளியால் என்னைத் தூய்மையாக்கி
நல்வழியில் நின்று இறை தொண்டு ஒன்றே
செய்திட வழிவகுப்பாய் அன்னையே
வாழ்நாள் உள்ள வரை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Oct-22, 10:17 am)
Tanglish : kalavaani thuthi
பார்வை : 102

மேலே