தாளகம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

தாளகத்தின் பேருரைக்கத் தாலுகவுள் நோய்குஷ்டம்
நீளக் குளிர்காய்ச்சல் நீடுகபம் - நாளகங்கொள்
துஷ்டப் பறங்கிப்புண் சூழழுகண் மண்டைநோய்
கிட்டப் படுமோ கிளத்து

- பதார்த்த குண சிந்தாமணி

இதனால் குட்டம், குளிர்க்காய்ச்சல், சயம், துட்ட இரணம், தலைநோய் இவை விலகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Oct-22, 4:26 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே