முட்டாள் தனம்
முட்டாள்களிடமிருந்து
அவர்களின்
முட்டாள் தனத்தை
தனியாக பிரிக்க
இயலுமா என்பது
பெரிய கேள்விதான்
முட்டாள்களிடமிருந்து
தனித்து நிற்பதே உசிதம்
முட்டாள்களுடன்
விவாதம் செய்வதும்
விழலுக்கு இறைத்த
நீர்ப்போல் வீணே
முட்டாள்தனம் குறித்து
இதுபோல் ஆயிரமாயிரம்
உவமான உவமேயங்கள் உண்டிங்கு...
உலகத்தில் முட்டாள் தினத்தை
கொண்டாடுவோரும் உண்டு
ஆனால் ஒன்னு
ஒருவரை அறிவாளியென்று
அறிந்து கொள்வதற்கும்
சொல்வதற்கும்
முட்டாள்கள்தான்
துணை புரிகின்றர்கள்
என்பதை மறுக்க இயலுமா...??
--கோவை சுபா