உடன்படு மனசே

உடன்படு மனசே
உடன்படு மனசே
உடம்போடு நீ
உடன்படும் மனசே

கடனை அடைக்கவே
இப்பிறவி எடுத்தோம்
கடனடைபடும் வரை
கலங்காது இருப்பாய்

உன்னல் உறங்கள்
உடம்புக்கு தேவை
உசுப்பி விடுவது
உன்னுடைய வேலை

எல்லா நிலையையும்
கடந்த பின்னாலே
வல்லப நிலையை
அடைந்திடும் மனதை

உலகோர் என்றும்
போற்றுவதும் இல்லை
அதன்நிலை அடைய
விரும்புவதும் இல்லை

மெய்யே மெய்நிலை
என்றே உலகம்
பொய்யாய் மெய்யை
போற்றுதல் செய்கிறதின்று

உயிரது உடலையும்
நீங்கிய பின்னால்
உடலின் பிரதியை
உலகமும் விரும்புவதேனோ

உயிரென்பது எதுவோ
உடலையும் உண்மையில்
இயக்குவது உயிரோ
இறப்பில் அதனிலையாது

யாதெனும் யாதெனும்
எதுவென்றாயின் இறுதியில்
மாயமென்று ஒன்று
இயக்குது உலகை நிலையாய்
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (4-Oct-22, 10:16 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 108

மேலே