பாஞ்சாலியின் பரிதவிப்பு

உருட்டுகிறார்கள் பகடையை;
வீடழிந்து நாடழிந்து
மானத்தை அடகு வைக்க
மீண்டும் ஆடுகிறார் என் கணவர்;

எஞ்சியிருக்கிறேன் நான் மட்டுமே
வைத்தவளை ஆடிடு
இழந்த அனைத்தயும் அடைந்திடு
கிசிகிசுக்கிறான் காதினிலே கபட சகுனி;

தருமம் தவறி தருமரும் இழைகிறார்
என்பக்கம் நோக்கவும் கூசுகிறதவரது கண்கள்
என் நெஞ்சம் கதறுகிறதே
ஒரு முறை என்னை பாருங்களென;

நானணிந்த துகிலை உறிக்காமல்
தோலெனதை உறித்தழித்தால்
பீரிவரும் உதிரமெனது
உடலெனதை மறைத்திடுமே;

என்னுள்ளே வீற்றிருக்கும் கண்ணனே
பெண்ணினத்தைக் காத்திடுவாய்
சண்டையை தொடங்கிவைத்தாய்
போரை நன் முடித்திடுவாய்.

சம்பத் குமார்

எழுதியவர் : கல்கத்தா சம்பத்குமார் (4-Oct-22, 8:35 pm)
சேர்த்தது : sampath kolkata
பார்வை : 37

மேலே