அண்ணலின் அறப்போர்

வரி விழுந்த முகம்
வடிவில்லா சுதந்திரத்தை
வடித்துத்தந்தது

இயங்காத இந்திய தாயின்
இதயத்தை
இயக்கங்களால் இயக்கியது

விடியாத
பூமி கிரகத்தை
சத்தியகிரகத்தால்
விடியச்செய்தது

ஆத்திரங்களை அள்ளி எறியும்
யுத்த ஓலங்களை நிறுத்தி
அகிம்சை சாஸ்த்திரத்தை
அகத்தில் ஓதியது

ஆயுதம் பிடித்து புறத்தை
அடிமையாக்கி
ஆண்டவர்
அகம் அஞ்ச
அகிம்சை ஆயுத தாங்கி
ஆட்சி சுதந்திரம் தந்தது
அண்ணலின் அறப்போர்

எழுதியவர் : K.நிலா (4-Oct-22, 1:23 pm)
சேர்த்தது : Kநிலா
பார்வை : 28

மேலே