எல்லாமும் எண்ணத்தால்
பணத்தால் ஏழை
குணத்தால் ஏழை
எண்ணத்தால் ஏழை
பண்பினால் ஏழை
செயலால் ஏழை
உள்ளத்தால் ஏழை
உறவுகளால் ஏழை
இடரினால் ஏழை
பிறப்பிலே ஏழை
தவற்றினால் ஏழை
இயலாமையால் ஏழை
ஏமாற்றத்தால் ஏழை
இந்த எல்லா ஏழ்மையும்
ஏழ்மையாகுமே - மனிதன்
உழைக்கும் எண்ணத்தை
உறுதியாக்கினால்
சுழலும் பூமியைப் போல்
துவளாதிருந்தால்
எல்லாக்கலையும் வசப்படுமே.
--- நன்னாடன்