உலகு வேண்டும்
பொய்மைகளில்லா
உலகு வேண்டும்..
வறுமைகளில்லா
உலகு வேண்டும்...
கொடுமைகளில்லா
உலகு வேண்டும்...
வஞ்சகங்களில்லா
உலகு வேண்டும்...
துரோகங்களில்லா
உலகு வேண்டும்...
துஷ்பிரயோகங்களில்லா
உலகு வேண்டும்...
பொறாமையில்லா
உலகு வேண்டும்...
வெறுமைகளில்லா
உலகு வேண்டும்...
அநீதிகளில்லா
உலகு வேண்டும்...
அநாதைகளில்லா
உலகு வேண்டும்...
கஷ்டங்களில்லா
உலகு வேண்டும்...
வேஷங்களில்லா
உலகு வேண்டும்...
மொத்தத்தில்
தீதுகளற்ற
நன்மைகள் நிறைந்த
உலகு வேண்டும்...
இவள்
எண்ணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா