என் அன்பு தாயே
○பத்தாவது மாதத்தில் - அம்மா
உன் தேகத்தில் வலியோடு
கிழிபட்டு
காணாத வேதனையை-என்னைக்
காண நீ சுமந்து,
○பணி கூட நீர் ஒழுக - அம்மா
என்று நான் அழுக,
அதைக் கண்டு நீ தழுவ,
கட்டியணைத்து முத்தமிட்டு
தொப்புள் கொடி வெட்டி,
கணவனுக்கு மகிழூட்டி,
மார்பிலணைத்து பற்றிக்கொண்டு
உணர்த்தினாய் தாய்மையின்
மகத்துவத்தை உலகறிய....
○பச்சிளம் குழந்தைக்கு பால்
கொடுத்து, தங்கமே! பவளமே!
என்றென்னை- நீ அழைத்து,
பசி தூக்கம் நீ மறந்து,
வாரி என்னை நீ அணைத்து,
கொம்புத்தேன் முத்தங்களை,
நித்தம் நித்தம் நீ கொடுத்து,
ஊரார் கண் பட்டுடுமேன்னு,
பொத்தி பொத்தி நீ வளர்த்து,
○ எத்தனை எத்தனை
பரிவுகள் தாயே! என்னை
இறுதிவரைசுமப்பவள் நீயே!
உனக்கு நிகர் யாருமில்லை- உன்
கடனடைக்க மதிப்பீடு
தெரியவில்லை.
-ஆனந்த.சமத்துவன்