சந்திரனே வா
சந்திரனே வா - எந்தன்
இந்திரனே வா
நான் பாடும் தாலாட்டை
கேட்டிங்கு வா.
உன்னை கண்டு - எந்தன்
விழிகள் ரெண்டு
பனிப்பூவாய் பூத்திடுமே
குளிர்ந்திங்கு வா.
என் பிள்ளை பசியாறவே
உனை காட்டி சோறூட்டுவேன்..
அவள் தூங்கவே நான்
கதை சொல்லுவேன்
கதைக்கேட்க மேகத்தில்
மறைந்தோடி வா..
அவள் கூடவே
நீயும் கைகோர்க்கவே
ஒளிந்தோடி விளையாட
விரைந்தோடி வா...
மலைமீது நீ ஏறிவா
நில்லாமல் நீ ஓடிவா
அவள் கூந்தலில்
நான் பூச்சூடவே
கைநிறைய மல்லிகைப்பூ
நீ கொண்டுவா
உன் முகம் போல அவள்
பூமுகம் மலர
குளிர் தென்றல் காற்றோடு
கைகோர்த்து வா...