உள்ளக் கதவினை திறந்து வைத்தேன்

ஓடும் குருதியில்
உனது பெயரை நிறுத்தி/
பிறக்கும் சுவாசத்திலும்
அதே பெயரைக் கிறுக்கி /

தும்மலுக்குள்ளே கம்மியாய்
அழைப்பிதழைத் திணித்து /
காற்றோடு உன்னுள்ளே
ஊடுருவிக் கொடுத்திட வலியுறுத்தி /

விரித்த பாயோடும்
சிரித்த முகத்தோடும்/
இரவெல்லாம் காத்திருக்கேன் /
உனது வரவுக்காகப் பூத்திருக்கேன்/

உதய வானை நோக்கி இருக்கேன் /
ஒவ்வொரு நட்சத்திரமாக
எண்ணிக்கையிலே கோர்த்திருக்கேன் /
விழித்திருக்கும் வெண்ணிலவிடம்
ரகசியம் உரைத்திருக்கேன்/
ராத்திரி தாமரையாக ஒத்தையில்
உனைக் காண மலந்திருக்கேன் /

ஆலோலம் பாடிடும் குயிலும்
கிளியும் கூண்டுக்குள் போயாச்சு /
ஆராரோ பாடிடும் பக்கத்து வீட்டுத்
தாயும் மழலையோடு தூங்கியாச்சு /
தெருவோர நாய்களும் ஒட்டுக்
கடைக்குள்ளே சுருண்டாச்சு/

இதமான காற்றும் அசைந்து
முருங்கைப் பூக் கொட்டி வாழ்த்தியாச்சு/
பனிக் குளிரும் என்னை நெருங்கியாச்சு /
உமக்காக. இதயத் தவிப்பும் பெருக்காச்சு/

தேக்கமாச்சு என்னுள்ளே ஏக்கம் /
தாக்கிடாதே வார்த்தையினாலே/
பார்க்கா விட்டால் நிறைவாகிடும் துக்கம் /
படியேறி நீவா உள்ளக் கதவினை
திறந்து வைத்தேன் /

எழுதியவர் : ஆர் எஸ் கலா (12-Oct-22, 2:54 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 76

மேலே