நேர்மையும் ஒழுக்கமும்

நேர்மையும் ஒழுக்கமும்
*************************
நேர்மைப்பூ பூத்தற்கு நெஞ்சமெனும் பூங்காவில்
வேர்விடும் நல்லொழுக்கம் வித்தாகும் - மார்தட்டும்
சீர்கெட்டப் பேர்களின் சிந்தையைச் சுட்டெரிக்க
ஆர்ப்பாட்டம் செய்யும் அது
*
ஒழுக்கமும் நேர்மையும் உள்ளத்துள் சூழும்
அழுக்குகள் போக்கிடும் ஆறு - இழுக்கிலா
வாழ்வை எதிர்கொளு வார்தமக்குப் பூங்காற்றைச்
சூழ்ந்திடச் செய்யும் சுகம்
*
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (13-Oct-22, 2:03 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 189

மேலே