சிறு துணுக்குகளாய்
சிறு துணுக்குகளாய்
வந்து வாங்கி
செல்லும்படி
கூவி அழைக்கும்
வியாபாரிகள்
வாங்காவிட்டால்
வாழ்க்கையே
கிடையாது
என்பது போல்
யாருக்கு?
நமக்கா அவர்களுக்கா?
வானம் சிணுங்க
ஆரம்பிக்க
வீதியெங்கும்
முளைக்கின்றன
கருமை நிற
காளான்கள்
பாதையெங்கும்
செடிகளில்
பூத்து குலுங்கும்
மலர்கள்
கண் விரித்து
இரசித்து செல்லும்
பூக்களாய்
மழலை கூட்டம்
மலர்களை இரசிப்பதா
இந்த பூக்களை
இரசிப்பதா?
வாழை மரம்
ஒன்று வாழ்க்கை
முடியும் போது
அதன் கன்று
பூத்திருந்ததை
கண்ணார கண்டு
சாய்ந்தது
வாழையடி வாழை
பழமொழியை
மெய்ப்பித்து
விட்டோமென்றா?
மீன்கள் கூட்டம்
எப்பொழுதும்
தூண்டிலைத்தான்
நம்புகின்றன