வடிவான மஞ்சள் நிலாவே
பிடி மணலெடுத்து
வடிவம் கொடுத்தானோ/
கொடி மலரெடுத்து
இடை அமைத்தானோ/
மின்னலைக் களவாடி
கருவிழி பதியமிட்டானோ/
கார்மேக நாரெடுத்து
தலைமுடி நட்டானோ/
பனியோடு தேனிணைத்து
செவ்விதழ் சமைத்தானோ/
பிரமனின் கலைவண்ணம்
உன்னிடம் கண்டேனடி /
வான் நிலவோடு
ஒப்பிட்டுப் பார்த்தேனடி /
பிரமிப்பின் எல்லை
வரைச் சென்றேனடி/
பிடிப்பானதடி வடிவான
மஞ்சள் நிலவே /
இருளான என்னிதயம்
வெளிப்பாகிடவே
குடியேறிடுவாயோடி/