நட்ட நடுக்கடல்

. நட்ட நடுக்கடல்
🛳🛳🛳🛳🛳🛳🛳🛳
கல்வி என்றொரு வங்கக்கடல் - கப்பல்
மாலுமியாய் ஆசிரியர்கள்
விலையில்லாப் பொருள் சுமந்து
பயணியராய் மாணவர்கள்...

செயல் வழிக் கற்றலிலே
புயல் வேக கடல் பயணம்
கட்சி சின்னத்தை மிஞ்சி விட்ட
கற்பித்தல் சின்னங்கள்...

எண்ணற்ற கற்றலட்டை
ஏறி வந்தால் வெற்றிக் கோப்பை
பத்தாண்டு பயணத்தில்
தரை தட்டியது டைட்டானிக்...

கம்பிப் பந்தலில் தொங்க விட்ட
நம்பிக்கையை தொலைத்து விட்டு
அலமாரிகளை பிரித்தெடுத்து
அட்டாலியில் போட்டு விட்டு...

பெடகோஜி படகெடுத்து
உடல் வலிமை ஒன்றிணைத்து
கற்றல் விளைவு தீவு நோக்கி
வெற்றி நடை மறு துவக்கம்...

காற்றழுத்த தாழ்வு நிலை
கொரோனாவாய் பேரலை
நங்கூரம் போட்டு விட்டு
நடுக்கடலில் நின்று விட்டோம்...

ஒன்றல்ல இரண்டல்ல
ஒன்றறை ஆண்டுகளாய்
இறந்தவர் எண்ணிக்கையை
இருந்தவர் செவிமடுத்தோம்...

கை கழுவி வாய் பொத்தி
காய்ச்சலையும் சுட்டுப் பார்த்து
மறுமுனையை இலக்காக்கி
மறுபடியும் தொடர் பயணம்...

இல்லம் தேடி கல்வி என்ற
அல்லக்கையும் துணைக்கு வந்து
எண்ணும் எழுத்தை தள்ளிவிட
கடந்துவோ ஒரு கடல்மைலே...

இதனோடு....

தடி போட்ட தாத்தா பாட்டி
உலகம் ஏசும் படிக்காட்டி
சாவதற்குள் படித்து விடு
புதிய பாரதத்தைப் படைத்து விட...

தன்னார்வலர் துணையோடு
தாத்தா பாரமும் தொடர்ந்து வர
ஏறிக்கோ நீயும் தாத்தா
எல்லோரும் போய் சேர்வோம்...................

எங்கே என்று மட்டும் கேட்காதீர்...

🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀

எழுதியவர் : வாழ்க்கை (15-Oct-22, 11:56 am)
சேர்த்தது : கசெல்வராசு
பார்வை : 27

மேலே