புன்னகைச் சித்திரத்தை தூரிகைலயால் எழுத துடிக்கிறேன்

புத்தம் புதுக்காலையில் மடியில்
புத்தகம் வைத்து குனிந்து
படிக்கும் உன்னிதழில் விரியும்
புன்னகைச் சித்திரத்தை
நான் ரசிக்கிறேன்
ரசிக்கும் சித்திரத்தை
தூரிகைலயால் எழுத
நான் துடிக்கிறேன்
சென்றுவிடாதே இப்பொழுதே
தூரிகையுடன் நான் வருகிறேன் !

எழுதியவர் : கவின் சாரலன் (15-Oct-22, 8:30 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 43

மேலே