கண்ணீரும் தித்திக்குதடி தேனாய் 555

***கண்ணீரும் தித்திக்குதடி தேனாய் 555 ***
உயிரானவளே...
ஏறி இறங்கும் பேருந்து
பயணமாக இல்லாமல்...
என் வாழ்க்கை என்னும் தொலைதூர
பயணத்தில் நீ வேண்டும்...
என்னோடு கைகோர்த்து
வாழ்க்கை பயணம் முடியும்வரை...
என்னை உன்
குழந்தையாக நினைத்து...
தினம் தினம் ஒரு முத்தமிடு
என் நெற்றியில்...
மறதி வந்தால் சில
நேரம் நிம்மதி கிடைக்கும்...
சிறிது
நேர மறதியில்கூட...
உன்னை நான்
மறக்காமல் இருக்க வேண்டும்...
ஒன்றை இழந்தால் இன்னொன்று
கிடைக்கும் என்பார்கள்...
உன்னை இழந்து நான் இன்னொன்றை
அடைய விரும்பவில்லை...
எதை நான் இழந்தாலும்
என் கரம்கோர்த்த உன்னை...
மரண தருவாயிலும் உன்னை
நான் இழக்கமாட்டேன் உயிரே...
நீ கொடுக்கும் அன்பால் சில
நேரம் வழியும் கண்ணீரும்...
தேன்துளியாய்
தித்திக்குதடி கண்ணே.....
***முதல்பூ.பெ.மணி.....***