இவள் வரைந்த கோலம்

நீலவானின் வானவில் மன்மதனுக்கு ரதி
வரைந்த வண்ண காதல் கோலம்;
இதோ எனைப் பார்த்து நாணி தலைகுனிந்து
கால் விரலால் இவள் மண்ணில் வரையும்
கோலம் என்மனதில் பதிந்துவிட்ட அழியா
காதல் கோலம் ரதியின் வானவில் எப்படி
வந்ததோ அப்படியே காணாது போகும்
இவள் வரைந்த கோலமோ என்மனதை
நிறைவு செய்யது நிலைக்க வைத்த அழியா காதல் கோலம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Oct-22, 8:34 pm)
பார்வை : 133

மேலே