பார்க்காமலே ஒரு காதல்

பார்க்காமலே ஒரு காதல்...
ஆனால் இது காதல் கோட்டை கதையல்ல...
எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது..,
முதன்முதலில் அவன் ஸ்பரிசத்தை உணர்ந்ததும்,
அவன் எனக்கே உரியவனாய்
என்னருகில் இருந்ததும்
ஒரே செவ்வாய் கிழமையில்தான்...
அவன் முகத்தைப் பார்ப்பதற்கு முன்னால்
நான் உணர்ந்ததென்னவோ
அவன் இதயத்துடிப்பை மட்டும்தான். ..
எங்கோ எதிலோ
ஒரு புள்ளியாய் உணர்ந்த அவனை
அன்றே முடிவு செய்துவிட்டேன்
எனக்கானவன் அவன் மட்டுமே என்று...
சில திங்கள் அவனுடன் மட்டுமே
வாழ்வதாய் நினைத்து மகிழ்ந்தேன் கற்பனையில்...
பல திங்கள் வேதனையால் தவித்தேன்
உண்ணவும் உறங்கவும் முடியாமல்...
கஷ்டப்பட்டு தேர்த்தினேன் என்னை,
என்னுள்ளிருக்கும் அவன் சுவாசத்திற்காக...
அவனை காணும் நாள் தெரிந்ததும்
யுகமாய் கழிந்தன
ஒவ்வொரு நாட்களும்...
இருப்பினும் நாட்கள் நெருங்க நெருங்க
சந்தோஷத்துடன் பயமும், படபடப்பும்
சேர்ந்துகொண்டேதான் இருந்தன...
அவன் எப்படி இருப்பானோ
என்ற எதிர்பார்ப்புடன்
நான் காத்திருக்க,
என்னவன் வந்துசேர்ந்தான்
என்னருகில் என் மகனாக...

எழுதியவர் : உமாவெங்கட் (19-Oct-22, 12:30 pm)
சேர்த்தது : உமாவெங்கட்
பார்வை : 258

மேலே