கண்ணன்

கண்ணன் முகில்வண்ணன்
எண்ணம் கடந்த எழில்வண்ணன்
எண்ணம் ஒருங்கே அவனிடத்தில்
என்றாகி விட்டால் நம்முன்னே
தோன்றிடுவான் ஆராவமுதன் அவன்
எண்ணமெல்லாம் அவன் வேண்டும்
உருவெடுப்பான் தேவாய் ,பிள்ளையாய்
நல்ல நண்பனாய் இன்னும்
முக்கண்னனும் காணமுடியா மாலவன்
நல்ல பத்தனுக்கு சேவகனாயும் இருப்பான்
கண்ணன் எளியவன் ஏழைபங்காளன்
என்கருத்தில் என்றும் அமர் நான்போற்றும்
கரு மாணிக்க தேவு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Oct-22, 9:46 am)
Tanglish : Kannan
பார்வை : 42

மேலே