இறைவன்

ஒன்றே தேவன்
ஒன்றாய் இருந்து
பலவாய் இருப்பவன் அவனே
அருவமும் அவனே
உருவமும் அவனே
ஒளியும் அவனே
ஒலியும் அவனே
நீராய் நெருப்பாய்
மண்ணாய் விசும்பாய்
காற்றாய் வெற்றிடமாய்
சூரிய சந்திரராய்
சுழலும் கோள்கள் தாரகைகள்
எல்லாமாய் இன்னும்
இல்லை என்பற்கு இல்லாமல்
அறிந்த உண்மை பக்தருக்கு
அருகிலேயே இருந்து
காட்சிதந்து காத்து
ஆதி அந்தமில்லா
ஆதி பகவனாய்
யாதுமாகி இருப்பவன்
பரம்பொருள் ஒருவனே
அவனே இறைவன்

எழுதியவர் : வவன்-தமிழ்பித்தன்-வாசுதே (22-Oct-22, 9:43 am)
Tanglish : iraivan
பார்வை : 462

மேலே