தீபாவளியே தீபஒளியே

தீபாவளி பண்டிகை
ஒவ்வொரு வருஷமும்
வந்து போகின்றது.
ஆனால்
சில தீபாவளி பண்டிகையின்
"வசந்த நினைவுகள்"
வருடங்கள் பல கடந்தபோதிலும் ,
குறிப்பாக
நாம் இளம் வயதில்
கொண்டாடி மகிழ்ந்த நினைவுகள்
எல்லோர் நெஞ்சைத்தை விட்டு நீங்காமல் பசுமையாகவே இருக்கும்.

1960களில் நான் கொண்டாடி மகிழ்ந்த தீபாவளி நினைவுகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில்
மிக்க மகிழ்ச்சியே...!!

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் பிறந்து விட்டாலே...
தீபாவளி என்னிக்கு வருது, என்னிக்கு வருதுன்னு
காலண்டரின் பக்கங்களை புரட்டிப் பார்க்கும் சுகம் "மனசுக்குள் மத்தாப்பு" போல் சந்தோசமா இருக்கும்.

இந்த வருஷம் என்ன பட்டாசு வாங்கனுமென்று
பள்ளி நோட்டில் எழுதி வைத்து
சக நண்பர்களுடன் விவாதிப்போம்..
விவாதங்கள் சில நேரங்களில் சண்டையில் முடியும்.

வீட்டில் பெரியவங்க
யாருக்கு என்ன டிரஸ் வாங்கறதுன்னு பட்டியல் போட்டு வைக்க...
அடுத்து என்ன பலகாரம் செய்வதென்று அக்கம் பக்கம் உள்ளோரிடம் பேசுவது என்று தீபாவளி பண்டிகை களைக்கட்ட ஆரம்பித்து விடும்.

இன்று காலங்கள் மாறி
டிஜிட்டல் முறையின் தாக்கம் மிகுந்த சூழ்நிலையிலும்,
தீபாவளி கொண்டாட்டங்களை
இன்றும் சில ஊர்களில்
பல குடும்பங்களும் கலாசாரத்தின் மணம் மாறாமல் கொண்டாடி வருவது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

கடல் கடந்து வாழும் நமது இந்தியக்குடும்பங்களும்
தீபாவளி பண்டிகையை
கொண்டாடி வருவது
மனதுக்கு மகிழ்ச்சியே...!!

தீபாவளியை எல்லோரும்
மகிழ்வோடு
உறவினர்கள்... நண்பர்களுடன் கொண்டாடுங்கள்.

தலைமுறைகள் பல கடந்தும்
"தீபாவளி" என்றவுடன்
நம் எல்லோர் நெஞ்சங்களிலும்
மகிழ்ச்சியென்னும்
"மத்தாப்பு" ஒளிர்வது நிஜமே..

அனைவருக்கும்
இனிய தீபாவளி
நல் வாழ்த்துக்கள்...!!
வாழ்க நலமுடன்...!!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (23-Oct-22, 6:22 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 1565

மேலே