அனாதைகள்

காந்த அலைகள் மூலம்
தகவல்களை பரிமாறிய "தந்தி முறை"
தடம் தெரியாமல் போனது...!!

வானமே எல்லையென்று
வான் வழியாக செய்திகளை
வாசித்துக் கொண்டிருந்த
"வானொலி பெட்டி"யும் வைகுண்டமேறியது...!!

தனியார் கூரியர் சர்வீஸ்
பெருகிவிட்ட காரணத்தால்
தலைமுறை தலைமுறையா
தபால்களை தாங்கிய
"தபால் பெட்டி"
இன்று கேட்பாரற்ற
அனாதை பெட்டியாக
ஆங்காங்கே தனிமையில்
தவித்துக் கொண்டு நிக்குது...!!

நாம் எல்லோரும் இணைந்து
விஞ்ஞான வளர்ச்சியை வரவேற்று
உயிருள்ள மனிதர்களை
உயிரோடு
புதைப்பதைப் போல்
நமது பழமையின் பெருமைகளை
புதைத்துக் கொண்டு
நிற்கின்றோம்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (21-Oct-22, 6:57 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : anathaikal
பார்வை : 338

மேலே