இடியில்லா மின்னல் விழியில் குறுங்கூ

இடி மின்னல் வானில்
கனமழை
இடியில்லா மின்னல் விழியில்
காதல் மழை

அடிதடி ஆர்ப்பாட்டம் கலவரம்
அடியாட்கள்
கைங்கர்யம்

ஊர்வலம் கோஷம் கூப்பாடு
அரசியலில்
தேர்தல் திருவிழா

பூவில் மது சிந்தும்
உன்னிதழில் தேன்சிந்தும்
என் மனதில் கவிசிந்தும்


குறுங்கூ

எழுதியவர் : கவின் சாரலன் (19-Oct-22, 3:52 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 47

மேலே