பார்வை
பார்வை
நிறங்களின்
நிஜங்கள்
கருமையாகத்தான்
இருந்திருக்கும்
ஓசையின்
உருவங்களை
உள்ளம் மட்டுமே
காண்பிக்கிறது
பாதையின்
மேடு பள்ளங்கள்
என் கைத்தடி
மனதுக்கு
காட்டி கொடுக்கிறது
இருந்தும்
இந்த உலகத்தின்
பலர் வர்ணிக்கும்
அழகை
அக கண்களால்
இரசித்து
மகிழ்ந்து கொண்டுதான்
இருக்கிறேன்.
பிறர் என்னை
பார்வை இல்லாதவன்
என்று சொன்னாலும்..!