கூத்தாடி கூத்தாடி
ஆனந்தக்களிப்பு. வகைப்பாட்டு
எடுப்பு
பாவஞ்செய் யாதிரு மனமே -- நாளை
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
முடிப்பு
நீர்மேல்கு மிழிஇக் காயம் --. இது
நில்லாது போய்விடும் நீயறி மாயம்
பார்மீதில் மெத்தவும் நேயம் -- சற்றும்
பற்றாதி ருந்திடப் பண்ணும்உ பாயம்
நந்த வனத்தில் ஓர் ஆண்டி -- அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டுவந் தான்ஒரு தோண்டி -- அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி
..........