மனிதம்

சுரேஷ் கனரா வங்கிக்கு புல்லட்டில் வந்தான்.அவன் ஒரு பிரைவேட் கன்ஷ்ட்ரக்ஷன் கம்பெனி முதலாளி.
பார்வேடு திங்கிங் பெர்சனாலிட்டி
திறமை அளவுக்கதிகமாகவே
இருந்ததால் இளம் வயதிலேயே
நல்ல முன்னேற்றறம்.

செல்போன் ஒலித்தது....
என்னங்க..ஈவ்னிங் ரிசப்சன்
போகனும் ஞாபகமிருக்கா...
கம்பெனி கம்பெனினு என்னை
மறந்திராம..

லாக்கர்லேந்து
நான் சொன்ன நகையை எடுத்திட்டு
வாங்க

சரி மது...பேங்க்தான் போயிட்டு
இருக்கேன்..என் பிப்டி சொன்னா
மறப்பேனா..

போதும்..போதும்..பார்த்து வாங்க..

ஈவ்னிங் தன் மனைவி மதுமிதாவின்
தோழிக்கு கல்யாண ரிசப்ஷன்.
அவள் வரச்சொல்லி இன்றைக்குத்தான் கரெக்டா போறதை நினைச்சு
போறதை நினைச்சு சந்தோஷப்பட்டான்..

பாங்கிற்குள் நுழைந்து மானேஜர்
கேபினைக் கடக்கும்போது
மானேஜரே வெளியில் வந்து
சார்.. வாங்க..வாட் யூ வான்ட்
சார்..சொல்லுங்க..

தாங்க்ஸ்...லாக்கர் ஆபரேட்
பண்ணனும்
.
ஓகே...வாங்க சார்...

அவரே வந்து லாக்கரின் மாஸ்டர்
கீ போட்டு விட்டு...சென்றார்..
முக்கியமான கஷ்டமரானதாலே....

வேண்டிய நகையினை எடுத்துக்கொண்டு மானேஜரை
பார்த்து ஸ்மைல் பண்ணியவாறே
வெளியில் வந்து பைக்கை
எடுத்து கிளம்பினான்
நல்ல வேளை காரை வீட்டில் நிறுத்திவிட்டு வந்தது
நல்லதாகப்பட்டது அவனுக்கு..
அவ்வளவு டிராபிக்.

அகிலனுக்கு...மனசு வெறுத்து
வந்தது...ஏற்கனவே பி.இ படிச்சிட்டு
வேலை தேடி கம்பெனி கம்பெனியா
அலைஞ்சு..ஒன்னும் அமையல..
இப்ப கூட இன்ட்டர்வியூ அட்டென்ட்
பண்ணிட்டு திரும்பி வீட்டுக்கு
போகும் போது...டிராபிக் ஜாம்..
சலித்துக்கொண்டே பைக்கை
ஓட்டினான்...அன்றாட சிறு தேவைக்குகூட அப்பாவிடம் கேட்க
வேண்டிய நிலைமை.

கொஞ்சத்தூர போயிருப்பான்..
அந்த வளைவில் ஓரத்தில்..
பிரவுன் கலர் சின்ன பவுச்(பை)அனாதையாகக்
கிடந்தது.. வண்டியை நிறுத்தி
விட்டு...சுற்றுமுற்றும் பார்த்தான்..
ஒருவரும் இல்லை...உறுதிபடுத்திக்
கொண்டு சிறு தயக்கத்துடன்
பேக்கை எடுத்து பயத்துடன் திறந்தான்..கை லேசாக நடுங்கியது
உள்ளே தங்க நகைகள்..அப்புறம்
வைர நெக்லஸ் வளைவிகள்..
இன்னொரு ஜிப்... .திறந்தான்,.விசிட்டிங்
கார்டு... செல்போன் நம்பர் உட்பட
எல்லாம் இருந்தது.

வியர்த்தது...ஒன்னுமே புரியல
வேகமாக பைக்கை உதைத்தான்..
கொஞ்சதூரம் வந்து ....அவன்
நண்பன் கௌதமுக்கு.. செல்லில்
பேசி விவரத்தைச் சொன்னான்...
உயிர் நண்பன்...எதாயிருந்தாலும்
அவனிடம் சொல்லிவிடுவான்..

கௌதம்தான் தொடர்ந்தான்..
இதோ பார்..அகில்..நான் சொல்றதைக் கேளு.. நீயா எந்த தப்பும் பண்ணலை
உன் எதிர்காலத்தை நினைச்சுப்பார்..
நான் சொல்ற இடத்துக்கு வந்திடு
பார்த்துக்கலாம்..மேலும் நிறையப்
பேசினான்..

ஆமாம்டா ..அதான் சரி..இதுல
யோசிக்கிறதுக்கு ஒன்னுமில்லை.
பைக்கை உதைத்தான்.

புல்லட்டை போர்ட்டிக்கோவில்
நிறுத்திவிட்டு சுரேஷ் பெட்ரோல்
டாங்க் கவர் பட்டனை திறக்க..
அதிர்ச்சியானான்..மூடப்படாமல்
இருந்தது. கைவிட்டு துளாவினான்..
பவுச் இல்லை..எப்படியோ நழுவி
கீழே விழுந்துவிட்டது..லேசா வியர்க்கத்
தொடங்கியது..பாதிவழியில்கூட
இருந்தது...முதல் தடவையாக
தனது தவறை உணர்ந்தான்..

என்னங்க...உள்ளே வாங்க..
கூப்பிட்டாள் மனைவி..
கிட்ட வந்த மதுமிதா...என்னங்க
ஒரு மாதிரியா நிக்கிரீங்க..
நடந்ததைச் சொன்னான்..

ஐயையோ...இப்ப என்னங்க
பண்றது..எல்லாம் காஸ்ட்லி
நகைங்க...

கொஞ்சம் பதறாதே..யோசிக்கிறேன்.....

அகிலன் விரைவாக கௌதம்
இருக்கும் இடம் வந்தான்..
நார்த் போலீஸ் ஸ்டேஷன்..
வாடா...இரண்டு பேரும் உள்ளே
போனார்கள்...
சப்.இன்ஸ்பெக்டர்...ரிலாக்ஸ்டா இருந்தார்.
உள்ளே வந்த இருவரையும்
என்ன என்பது போல் முறைத்தவாறு
கண்ணால் நோக்கினார்..

அகிலன் நடந்ததை ஒன்றுவிடாமல்
கூறிவிட்டு பையை டேபிளில்
வைப்பதை பார்த்த இன்ஸ்பெக்டர்
ஆச்சரியப்பட்டார்.
இந்தக்காலத்தில் இப்படிப்பட்ட
இளைளுர்களா....
வெளிக்காட்டாமல் போலிஸ் பாணியிலே பேசினார்..
ஏம்பா ..நீங்க எல்லா நகைகளும்
ஒப்படைச்சுட்டீங்க அப்படிங்கிறதை
எப்படி நம்புறது...
என்றவாறு பையை உதறினார்.
விசிட்டிங் கார்ட் விழுந்தது..
பார்த்தவர்..ஆச்சரியப் பட்டு இவரா .ஏம்பா ...இதான்
கார்டு இருக்கே...ஏன் போன்
பண்ணலை...

பண்ணினாங்க சார்.. என்றவாரே
உள்ளே வந்த சுரேஷைப்
பார்த்தார்...இன்ஸ்பெக்டர்.

ஆமாம் சார்...பையோடு தொலைந்த
நகைகள் இனிமேலா வரப்போகுது
போலீஸ் கேஸ்னு அலையவேண்டி
இருக்கப் போகுதுனு நினைச்சுட்டு
இருந்தப்போ எனக்கு போன் வந்தது.
ஸ்டேசனுக்கு வரச்சொல்லி..
தாங்க்ஸ் பிரதர்ஸ்...என்றான் சுரேஷ் .

சார்...நகைகள் எல்லாம் கரெக்டா
இருக்கான்னு செக் பண்ணிக்கிங்க
சார்...பின்னாடி வாங்க முடியாது..

நோ..வேண்டியதில்லை...இன்ஸ்பெக்டர்

எப்ப இந்த யங்ஸ்டர்ஸ் முறையா
அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்படாம திருப்பி கொடுக்கவந்தாங்களோ அவங்க
நேர்மையை சந்தேகப் படக்கூடாது..
நான் எழுதித்தர்ரேன் இன்ஸ்பெக்டர்..

முதல்முறையா இரண்டு பக்கத்திலும் உள்ள நல்ல உள்ளங்ளை எண்ணி மகிழ்ந்தார் இன்ஸ்பெக்டர்..

சரி...சார்..நாங்க புறப்டுறோம்..
ஒன் மினிட்...புரோ..உன் பெயரென்னப்பா...

அகிலன் சார்..இவன் கௌதம்
ஐ.டி கம்பெனில வேளை..

நீ எங்கப்பா ...வேளை..
தயங்கினானன் அகிலன்..

நான் சொல்றேன் சார்..
அவன் பி.இ சிவில் ..வேலை இன்னும் கிடைக்கலை...பாவம்.

இன்ஸ்பெக்டர்... இத்துனை லட்சம்
திருப்பி தந்த இந்தப் பையனுக்கு
ஏதாவது..

உங்க இஷ்டம் ...ரூபாய் உங்க
விருப்பப்படி கொடுங்க சார்..

அகிலன் எழுந்தவாறே சாரி
இன்ஸ்பெக்டர் சார்...
நான் எந்தவித எதிர்பார்ப்பும்
இல்லாம என் கடமையைத்தான்
செஞ்சேன்..வர்றேன்..

சுரேஷ்.. பணம் கொடுத்தா
உன் நேர்மையை விலைபேசினமாதிரி ஆகிடும்..இல்ல.....ஓகே...

அகிலன் சுரேஷை உன்னிப்பாக
நோக்கினான்..

நேர்மைப் போற்றி என் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில
பீல்டு எஞ்சினியரா நியமிக்கப்
போறேன்..சாலரி அதர் பெனிபிட்ஸ்
பற்றி கம்பெனி மேனேஜர்கிட்ட
கேட்டுக்கிட்டு ...

அப்புறம் நாளைக்கே வந்து வேலையில சேர்ந்திடு..ஓகே..

அகிலன் திகைத்து நின்றான்..
கண் கலங்கிவாறே
தாங்க்ஸ் ..வார்த்தைகள் வரவில்லை.

வாழ்த்துக்கள் தம்பி...இது இன்ஸ்பெக்டர்..

நண்பனை கட்டிப்பிடித்து அரவணைத்தான் ஆனந்தமாய்
கௌதம்.


அறந்தை ரவிராஜன்

எழுதியவர் : ரவிராஜன் (28-Oct-22, 9:52 pm)
சேர்த்தது : ரவிராஜன்
Tanglish : manitham
பார்வை : 138

மேலே