அகிலனும் பண்ணையார் பரந்தாமனும்

அப்பா..பிளஸ்டுல தாம்பா
ஸ்கூல் பஸ்ட்..இன்னும் நிறைய
படிச்சு பெரிய வேலைக்கு போனப்புறம் போய் பெரிய வீட்டுக்காரர்கிட்டே ஆசீர்வாதம்
வாங்லாம்பா..என்று தம் மகன்
அகிலன் சொல்வதைக்
கேட்காமல் பண்ணையார் பரந்தாமனிடம் கூட்டிச்சென்றான்..

ஐயா...கும்பிடுறேன்ங்க..
நிமிந்து பார்த்தார் பரந்தாமன்...

வாடா...முனுசாமி..என்ன விஷயம்
அது யாரு பக்கத்துல வாட்ட சாட்டமா...
உம் புள்ளையா...

ஆமாங்க..பேரு அகிலன்..
பக்கத்தூர்ல பன்னென்டாவது
படிச்சு ஸ்கூல் பஸ்ட் வந்திருக்கான்.

அப்படியா...ஊருக்கு வெளியில வீடுங்கிறதாலே பையனைப் பார்த்ததே இல்லை

பரவாயில்லையே.. இவ்வளவு தூரம்
உங்கல்ல படிக்கிறது பெரிசு..

சரி சரி... உனக்கும் வயசாயிட்டது..
முன்ன மாதிரி பண்ணை வேல
பார்க்க முடியல...பையனும் வளர்திருக்கான்...
உனக்கு ஒத்தாசயா வச்சிக்க..
வருஷ சம்பளம் தரச்சொறேன்...
என்றவாறு அகிலனை ஓரக்கண்ணால் பார்த்தார் பண்ணையார்...

அகிலனுக்கு வந்த கோபத்தை
அடக்க முடியலை...அப்பாஆஆஆ
என்று கத்தினான்.

இதுக்குத்தான் கூட்டியாந்தீங்களா..
நீங்க வேணும்னா இந்த அடிமைத்
தனத்துல ஆயுளை முடிங்க..நான் படிச்சு பெரியாளா வந்து இதுக்கு
முற்றுப்புள்ளி வைக்கப்போறேன்..

டேய் அகிலா..யாரு முன்னாடி
என்ன பேசுற...ஐயா.. நமக்கு
படியளக்கிற எஜமான்டா...
மன்னிப்பு கேள்டா...

இடைமறித்தார் பண்ணையார்..
பேச விடு முனுசாமி..இள ரத்தம்..

தம்பி...உங்க அப்பா வசதிக்கு
மேல படிக்க முடியுமா...இல்ல
படிச்சுத்தான் என்ன கிழிக்கப் போறே.. இளக்காரமா பார்த்தார்..

என்ன கிழிக்கிறேன்னு பாருங்க..
நீங்களும் பணத்திமிர் பிடிச்ச
பண்ணையாருனு நிருபிச்சுட்டீங்க..
அப்பா கையை இழுத்துக்கொண்டு
விருட்டென கிளம்பினான்...
நெஞ்சில் எரியும் நெருப்போடு..

நேற்று நடந்தது போல இருந்தது
எல்லாம் அவனுக்கு...
இன்று..
காலேஜ் படிப்பை முடிச்சுட்டு...
அப்படியே கோச்சிங் கிளாஸ்ல
படிச்சு நினைச்ச மாதிரியே பஸ்ட்
குரூப்பில் பாஸாகி இன்று
சப் கலெக்டர் போஸ்ட் ஆர்டரோட
சொந்த கிராமத்துக்கு நண்பர்களின்
காரில்...

என்னடா...அகில்.. சந்தோசமா
இல்லாம...ஏதோ யோசனையில்
இருக்கே ...அவன் நண்பன்
காரை ஓட்டியவாறே கேட்டான்.

கார் வீட்டு வாசலில்...சின்ன கிராமம்
ஆனாலும் கூட்டம் நிரம்பி இருந்தது..
கிராமத்துலயே பெரிய படிப்பு..
சப் கலெக்டர் வேற..

திருவிழா கோலமாக இருந்தது..

முனுசாமிக்கு மகனைப் பார்த்ததும்
சந்தோஷம் தாங்கல..கண்ணில்
ஆனந்தத்துடன் அவன் மனைவி பக்கத்தில்..

காரைவிட்டு இறங்கி பெத்தவங்க
காலில் விழுந்து வணங்கினான்..

வாழ்த்த வந்தவங்களையும்
வணங்கிட்டு..

அப்பா கொஞ்சம் வாங்க..காரில்
ஏற்றிக்கொண்டு கிளம்பினான்..

எங்கப்பா..?
சொல்றேன்....
பண்ணையார் வீட்டு வாசலில்
கார் நின்றது.
புரிந்தது முனுசாமிக்கு..
பதட்டமானான்.

கார் வந்து நிற்பதை பார்த்து
பண்ணையார் வந்தார்..

அடடே..முனுசாமி..
யார் அகிலனா..எதிர் பார்த்தேன்..

சப்.கலெக்டர் ஆகி இருக்கீங்க போல.. சந்தோஷம் தம்பி.

சந்தோஷம் இருக்கட்டும்..
அன்னைக்கு படிச்சு என்னத்தை
கிழிக்கப்போறேன்னு கேட்டிங்க..
அப்ப பற்றிய நெருப்பு..இப்பத்தான்
அணைஞ்சிருக்க..
என்னத்த கிழிச்சேன்னு பாருங்க..

சப்.கலெக்டர்..

அகிலா..என்ன பேசுற நீ..
உண்மை தெரியாம பேசாதே..
முனுசாமி கத்தினான்..

முனுசாமி.. விடு..விடு...ஒன்னும் தெரிய வேண்டாம்..
என்னை சொல்ல விடுங்க ஐயா..

அகிலா.. நீ காலேஜ்ல படிக்க
ஆரம்பித்ததுலேந்து படிப்புக்கு
ஹாஸ்டலுக்குனு தவறாம எவ்வளவு
அனுப்புனேன்..

தெரியும்பா.நீங்க கஷ்டப்பட்டு
இதோ இந்த பண்ணைக்கு உழைச்சு
அனுப்புனது தெரியாதா..
மறக்க முடியுமாப்பா..

அது சரிப்பா...என் சொற்ப வருமானத்தில அவ்வளவு பணம்
அனுப்பமுடியுமா..இல்ல
என்னைக்காவது எப்படினு கேட்டிருக்கியா..

அகிலன் அதிர்ச்சியாய் அப்பாவைப்
பார்த்தான் எப்படி என்பது போல..

ஐயா....எல்லாப் பணமும் ஐயா
கொடுத்ததுப்பா....அவரைப் போய்..
அழுது விட்டான்...பேசமுடியல..

அப்பா நீங்க சொல்றது...

அகிலா..! .நான் உன்னிடம்
எதையுமே சொல்லக் கூடாதுனுதான்
சத்தியம் வாங்கினேன்..

இப்ப சொல்றேன் கேளு..
முனுசாமி சொன்னது எல்லாம்
உண்மை தான்...

அன்றைக்கு நீ வீட்டில வந்து பேசும்போது உன்னிடம் இருந்த
அந்த வேகத்தைக் கவனிச்சேன்..
அப்பவே உனக்குள்
எரிந்து கொண்டிருந்த ....படிக்க வேண்டும் சமுதாயத்தில் நாமும்
முன்னேற வேண்டும் என்ற வெறியைக் கண்டேன். அதைத் தூண்டுவதற்குத்தான் நான்
அப்படி பேசினேன்..
அந்தமாதிரி உன்னை நான் சீண்டியிருக்காவிட்டால் உன்னைப்
போல பொறுப்பான கலெக்டரை
பெற்றிருக்குமா இந்த ஊரு..

பெருமையா இருக்குப்பா..
உன்னை நினச்சு. நீ நல்லா
இருப்பே..

பண்ணையார் பரந்தாமன்
பேசப் பேச அகிலனுக்கு பேச்சே
வரவில்லை...

என்னை மன்னிச்சுடுங்க ஐயா..
உங்களால்தான் இந்தப் பதவி..
அதை உங்களுக்கு காணிக்கை
ஆக்குகிறேன்..

பணக்காரர்கள், பண்ணையார்கள்
எல்லாருமே கெட்டவர்கள் இல்லை
அவர்களிடமும் கருணை உள்ளம்
உள்ளது என்பதை இப்போ புரிஞ்சுகிட்டேன் ஐயா...
உங்களைப் போல நூற்றில் ஒருத்தர்
இருந்தாக்கூட சமுதாயம் எப்பவே
முன்னேறி இருக்கும்.

என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க
என்றவாறு காலில் விழப்போனவனை தடுத்து..

இதோ பார்...நீங்க இனிமே யார் கால்லேயும் விழக்கூடாது...யாரும் யாருக்கும் அடிமை இல்லை.

கண்கள் லேசாக கசிந்தபடி
தட்டிக்கொடுத்தார் பண்ணையார்
பரந்தாமன்.

எழுதியவர் : ரவிராஜன் (28-Oct-22, 5:38 pm)
சேர்த்தது : ரவிராஜன்
பார்வை : 87

மேலே