முல்லைச் சிரிப்பினை முத்தழகே

மூடு வதேனோநீ முல்லைச் சிரிப்பினை
பாடிவந்த பாவமந்த பூந்தென்றல் ஏமாந்து
வாடித் திரும்புது வசந்த காலத்தில்
நாடிவந்த நற்றோழி யைஏ மாற்றாதே



மூடு வதேனோநீ முல்லைச் சிரிப்பினை முத்தழகே
பாடிவந்த பாவமந்த பூந்தென்றல் ஏமாந்து வெறுப்பினில்
வாடித் திரும்புது பாராயோ வசந்த காலத்தில்
நாடிவந்த நற்றோழி மகிழ்ந்து வீசட்டுமே மாற்றாதே

------------------------------------------------------------------------------------------------------------------------------------------
யாப்பு பயில்வோர்க்கு மட்டும் ::

முந்தைய பதிவில் சிந்தியல் வெண்பாக்களில் சொன்ன கற்பனையை
பாவினனமான கலிவிருத்தம் கலித் துறையில் அமைத்து எழுதியிருக்கிறேன்
வெண்பாவிற்கான கட்டுக்கோப்பான தளைவிதிகள் பாவினத்திற்கு இல்லை
ஆதலால் வடிவமைப்பதில் இது சற்று எளிது
மோனைகளும் பொலிவு தருவதை காணவும்
முதலடியின் அசை அமைப்பு வழியில் பிற அடிகளிலும் வருமாறு கற்பனை சிதையா
வண்ணம் அமைக்க முடிகிறதா பாருங்கள்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Oct-22, 9:41 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 49

சிறந்த கவிதைகள்

மேலே