இயற்கை

வசந்த காலம் சோலையில் ....
செம்பருத்தி மேல் பட்டாம்பூச்சி
மலரோடு உறவாடி மதுவுண்டு போகிறது
மலருக்கு நோகவில்லை கசங்கவில்லை hu
பின் தென்றல் வந்து வீசி மலரின் வாசனை
ஏந்தி சென்றது மலருக்கு நோவேதும் இல்லை
இயற்கையில் நான் ரசித்த சில
இனிய உறவாடல்கள் இந்த மென்மை
மனிதனிடம் ......? துர்லபம் ....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Nov-22, 2:04 pm)
Tanglish : iyarkai
பார்வை : 70

மேலே