படைப்பின் ரகசியம்

வெறும் களிமண் பானையானது இந்த
குயவன் கைவண்ணத்தால் அதோ அந்த
அழகிய பெண்ணின் கருங்கல் சிலை
சிலையை படைத்தவன் ஓர் சிற்பி
அதோ போகின்றாள் அழகின் உருவாய்
அவள் ஒரு பெண்ணின் கருவிலிருந்து
உருவாய் வந்தவள் இவள் வெறும்
ஆண் பெண் சேர்க்கையில் வந்தவளா இவள்?
அப்படியாகில் அந்த உருவம் அதின்
அங்கங்கள் உருவானது எப்படி அதுவே
படைப்பின் ரகசியம் அதன் பின் .......
படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் என்னும்
மறை சொல்லும் வாக்கியம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Nov-22, 8:54 pm)
Tanglish : Padaippin ragasiyam
பார்வை : 61

மேலே