வானவில்லுக்கு ஒரு கவிதை

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

*வானவில்லுக்கு*
*ஒரு கவிதை*

படைப்பு கவிதை ரசிகன்
குமரேசன்

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

*வானவில்*....

வான் மங்கையை
காதலன்
கைபிடித்து இழுக்கும்போது
உடைந்த
வளையல் துண்டுகளோ ?

ஒருவேளை
வான் உலகத்திலும்
கோலிப்பண்டிகை
கொண்டாடுகிறார்களோ?

ஐயோ...!
தேவலோகத்திலும்
கட்சி
ஆரம்பித்து விட்டார்களோ ?

சீதையை மணக்க
இராமர்
வில்லை
உடைத்தது போல்....
வானுலகத்தில்
எந்தப் பெண்ணை மணக்க
இந்த (வான)வில்
வைக்கப்பட்டுள்ளது...?

மழையை வரவேற்க
வைக்கப்பட்ட
அலங்கார வளைவுகளோ ?

ஆகாயப் பள்ளி
அறிவியல் ஆசிரியர்
நிறப்பிரிகை
சோதனையை செய்து காட்டி
மாணவர்களுக்கு
பாடம் நடத்துகிறாரோ ?

தூறல் மலையில்
வான்மங்கை
காய போட்ட
வண்ணச்சேலை
நனைகிறதோ?
எடுக்க மறந்து
எங்கு சென்றாளோ?

மேகச் சுவரில்
ஒலிக்கதிர் தூரிகையால்
சூரியன் வரைந்த
வண்ண ஓவியமோ....?

*கவிதை ரசிகன் குமரேசன்*

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

எழுதியவர் : கவிதை ரசிகன் (3-Nov-22, 8:58 pm)
பார்வை : 60

மேலே