முதுமை சுமையென நினைத்தால்

முதுமை வந்தது என்று
பயந்துவிடாதே
தனிமை சிறை என்று
தளர்ந்துவிடாதே
பிள்ளைகள் தாங்குவாரென
நம்பிவிடாதே
இல்லையென்று வரும்போது
மனம் வெதும்பிவிடாதே
முதுமையான விலங்குகூட
எதிர்பார்பதில்லை
உணவுக்காக பிள்ளைகளை
நம்பி வாழ்வதில்லை
வாழும்போது உனக்கென்று
சேர்த்து வாழ பழகு
கடைசிவரை கண்ணியத்தை
இழப்பதில்லை அழகு
உற்ற துணையாய் வருவது
மனைவியென்றே உணரு
மற்றதெல்லாம் மாயையான
வெறும் பாழுங்கிணறு
ஏமாற்றத்தை எதிர்பார்த்து
அறிந்தே வாழ்வது அறிவு
தடுமாறும் வயதினிலே
வேண்டாம் பொய்யான பரிவு
வாழுவரை கொடுக்காதே
மற்றவர்க்கு தொந்தரவு
இறந்தபின் திரும்பிப்பார்
ஒன்று சேர்ந்து வரும் உறவு

எழுதியவர் : அறந்தை ரவிராஜன் (2-Nov-22, 3:50 pm)
சேர்த்தது : ரவிராஜன்
பார்வை : 443

மேலே