கம்பன் எழுதினான் காவியக் காதலை
கம்பன் எழுதினான் காவியக் காதலை
அண்ணலும் நோக்கிய தைஅவளும் பார்த்ததை
நல்விருத்த ஒண்பாட லில்
அன்னப் பறவையும் தூதுசென்ற காதலை
புன்னகையில் வெண்பாவில் ஏற்றினான் பாவினின்
மன்னன் புகழேந்தி யான்
தெள்ளிய தீந்தமிழ் நற்குறட் பாவினில்
அள்ளிநாம் நித்தம் பருகிடகா மத்துப்பால்
வள்ளுவன் தந்தானன் றோ
----கம்பன் எழுதியது ராமன் சீதையின் காவியக் காதல் இராமாயணம்
----புகழேந்தி எழுதியது அன்னம் தூது செல்லும் நளன் தமயந்தியின்
காதல் காவியம் நள வெண்பா
இவையிரண்டும் வாழ்ந்த அயோத்தி நிடத நாட்டு மன்னர்களின் காதல் கதை
வள்ளுவன் எழுதியது நேற்று வாழ்ந்த இன்று வாழும் நாளை வாழப் போகிற
சாதாரண மக்களின் காமத்தை அல்லது காதலை சொல்லும் காமத்துப் பால்
எனும் குறட் பாக்கள் .அதுதான் வித்தியாசம்
மலரினும் மெல்லிது காமம் என்பான் ஒரு குறளில்
கம்பன் புகழேந்தி வள்ளுவன் போற்றல் பாடல் அமைந்த யாப்பு வகை
சிந்தியல் வெண்பா
முதல் பா பல விகற்பத்திலும் பின்னிரண்டும் ஒரு விகற்பத்திலும்
அமைந்திருப்பதை யாப்பு பயில்வோர் காண்க