துளிகள் துளிகள்

விந்தையில் விந்தையாம் வியக்கத்தகு விந்தையாம்;
விதைத் துளிகள் விதைத் துளிகள்;
விழுந்து வித்தாகி முளைத்ததுவாம்.
முளைத்தளிர்கள் (துளிகள்) முளைத்தளிர்கள் (துளிகள்) வளர்ந்து மரம் செடி கொடிகளானதுவாம்;
ஒற்றை விதைக்குள் ஓராயிரம் மரங்களாம்;
மழைத்துளிகள் மழைத்துளிகள் மண்ணில் விழுந்த மழைத்துளிகள்;
தண்ணீராய்ப்பெருக்கெடுத்து நீர் ஓடை அருவி நதி குளம் கால்வாய் என்று நீண்டு வந்ததால் உய்த்ததாம் உலகம்;
மழைத்துளிகள் மழைத்துளிகள் பட்டு விதைத்தளிர்கள் தளிர்க்க வளர்ந்தனவாம் வனமாய்,நெடுமரமாய், பயிறாய்நின்றுஉலகமும் செழித்ததுவாம்;
மழலைத் துளிகள் மழலைத் துளிகள் கொட்டி, உயிர் பெற்றனவாம் பாசப்பயிர்கள்.
தேன்துளிகள் தேன்துளிகள் சொட்டிதித்திக்குமாம்;
அன்புத்துளிகள், அன்புத்துளிகள் விழுந்து அரவணைத்ததாம் அன்னையின் கரங்கலாய்.
பனித்துளிகள் பனித்துளிகள் விழுந்து படர்ந்து வெண்புத்தாடை போத்தியதாம் பூமிக்கு.
புன்னகைத்துளிகள் புன்னகைத்துளிகள் பூத்து புத்துயிர் தந்ததாம்;
கண்ணீர்த்துளிகள், கண்ணீர்த்துளிகள்விழுந்து நனைத்ததாம் சோகத்தை.
விஷத்துளிகள் விஷத்துளிகள், ஒன்றுபட்டு உயிரை மாய்த்ததுவாம்.
நம்பிக்கைத் துளிகள் நம்பிக்கைத் துளிகள் விழுந்து; வெற்றிக்கனி கிடைத்ததுவாம்.
வேர்வைத் துளிகள் வேர்வைத் துளிகள் பட்டு, உழைப்பு மழையில் உருபெற்றதாம் முதலாளித்துவம்;
இரத்ததுளிகள் இரத்ததுளிகள்
உயிரைகாக்கும் உதிரமாம்;
இரக்கத்துளிகள், இரக்கத்துளிகள்;
இதயத்தில் சுரக்கும் இரக்கத்துளிகள்,
வழங்கி வழங்கி வல்லல்ஆக்குமாம்.
வஞ்சனைத்துளிகள்,வஞ்சனைத்துளிகள்;வஞ்சகனின் வஞ்சனைத்துளிகள் வதைக்காமல் விடாதாம்
ஆன்மீகத்துளிகள்,ஆன்மீகத்துளிகள்;
அறவழிக்கு வழிகாட்டும் ஆன்மீகத்துளிகள்;
ஆத்மாவை தூய்மை படுத்துமாம்.
சிந்ததைத் துளிகள் சிந்தனைத்துளிகள் விழுந்து செதுக்கியதாம் புதுமைகளை புரட்சிகளை;
சினத்துளிகள், சினத்துளிகள், சிதறி சிதைத்ததுவாம் மனித நேயத்தை.
கவிதைத் துளிகள் கவிதைத் துளிகள் விழுந்து
கவிமழை பொழிந்ததுவாம், காவியக்கடல் பெருக்கெடுத்ததுவாம்;
வற்றிச் சென்ற ஈரம் விதைத்திடும் சோகம்;
விழுந்து கிடக்கும் காதல் துளிகள் வழிந்து கிடக்கும் நாண மழைகள்;
காதல்துளிகள் காதல் துளிகள் விழுந்து கண்ணை மறைத்ததுவாம்.
நேசத்துளிகள் நேசத்துளிகள் விழுந்து நேசித்தே
அன்பை பண்பை ஆறாய் பெருக்கியதாம்;

துளிகள் துளிகள் விழிகள் சுமந்த துளிகள் விட்டுச்சென்ற பாசத்துளிகள்; விடைதேடி நம் மனதில் விழுந்தே மனதில் வாழும் சோகப் பயிர்கள்.
மைத்துளிகள் மைத்துளிகள்,மனதில்தோன்றியதை, காகிதத்தில் உதிரவிடும்மைத்துளிகள்;
மணித்துளிகள் மணித்துளிகள், நிற்க்காமல் நகர்ந்தே ஓடி,காலத்தை விரட்டும் மணித்துளிகள்;
இளமையை முதுமையாக்கும் மணித்துளிகள்
இருப்பவனை இறக்கவைக்கும் இந்த மணித்துளிகள்.

அதிகாலைவணக்கத்தைக்கூறும்அன்பன்அ. முத்துவேழப்பன்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (3-Nov-22, 3:11 pm)
பார்வை : 32

மேலே