கொள் கொல்
கொள் கொள் கொள்;
கொள் கொள் கொள்போல் வலிமை கொள்;
அன்பு கொள்;
பண்பு கொள்;
பணிவு கொள்;
பழகிக்கொள்;
வாய்மைகொள்;
தூய்மைகொள்;
நன்மைகொள்;
மையல் கொள்;
கொல் கொல் கொல்;
அகந்தையை கொல்;
ஆணவத்தை கொல்;
அகங்காரத்தை கொல்;
அச்சத்தை கொல்;
கொள்ளுவதை கொள்;
கொல் கொல் வதையை கொல்;
அடக்கம் கொள்;
அநியாயத்தை கொல்;
ஆற்றல் கொள்;
ஆனவத்தை கொல்
இரக்கம் கொள்;
இருமாப்பை கொல்
ஈகை கொள்;
ஈனச்செயலை கொல்;
உண்மை பேச பழகிக் கொள்;
உதவாத பழக்கத்தை கொல்;
ஊக்கம் கொள்;
ஊமையாய் இருப்பதை கொல்;
எளிமை கொள்;
எய்யாமையை(அறியாமை) கொல்;
ஏற்புடையதை செய்ய பழகிக்கொள்;
ஏக்கத்தை கொல்;
ஏற்றத்தாழ்வை கொல்;
ஐம்பொறி ஆட்சி கொள்;
ஐயத்தை கொல்;
ஒழுக்கத்தை கற்றுக் கொள்;
ஒவ்வாமையை கொல்;
ஓதகற்றுக் கொள்;
ஓலம் விடுவதை கொல்;
ஒளவை தந்த ஆத்திசூடியை கற்றுக் கொள்;
ஔவியத்தை கொல்;
கருணைகொள்;
கவலையை கொல்;
தனிமை கொள்(ல்);
தடுமாற்றத்தைகொல்;
துணிவு கொள்;
துன்பத்தை கொல்;
அடக்கம் கொள்;
அநியாயத்தை கொல்;
பலம் கொல்;
பலகீனத்தை கொல்;
பழகிக்கொள்;
பயத்தை கொல்;
பழக்கத்தில் அன்புகொள்;
பகையில் கொடூரத்தை கொல்;
பயணத்தில் கவனம் கொள்;
பயத்தில் நடுக்கத்தைக் கொல்;
வாழ்வை புரிந்து கொள்;
வழக்காடுவதை கொல்;
வாழ்வியலை கற்றுக்கொள்;
வம்பு தும்பு வீம்மை கொல்;
உழைக்கக் கற்றுக்கொள்;
ஊதாரியாய் சுற்றுவதை கொல்;
மனதை புரிந்து கொள்;
மோகத்தை கொல்;
சிரிக்க பழகிக்கொள்;
சினத்தை சீற்றத்தை கொல்;
நம்பிக்கை கொள்;
நடுக்கத்தை கொல்;
மையல் கொள்;
மயக்கத்தை கொல்;
மறக்க கற்றுக்கொள்;
மரியாதை கொள்;
மறதியைகொல்;
மாற்றத்தை புரிந்து கொள்;
மடமைதனை கொல்;
மனிதம் கொள்;
மதவெறியை கொல்;
மானம் கொள்;
அவமானத்தை கொல்;
நேசிக்க கற்றுக்கொள்;
நேரத்தை வீணடிக்கும் பழக்கத்தை கொல்;
பண்பு கொள்;
பகையை கொல்;
பகுத்தறிவு கொள்;
பாகுபாடு பேதம் காட்டுவதை கொல்;
துணிச்சல் கொள்;
துவழுவதை கொல்;
துன்பத்தை துடைக்க பழகிக்கொள்;
பிறரை தூற்றுவதை கொல்;
வாய்ப்பைத் தேடி பயணம் கொள்;
வருத்தத்தை கொல்;
வாய்மை கொள்;
வறுமையை கொல்
வலிமை கொள்;
தலிமையை(தளர்வு)கொல்;
வளமை கொள்;
பழமையை கொல்;
கற்றுகொள்;
கல்லாமைகொல்;
தூய்மைகொள்;
துயரைகொல்;
குடிமம்கொள்;
குடியைகொல்;
எண்ணங்களை புதுப்பித்துக் கொள்;
ஏமாற்றத்தை கொல்;
கல கலப்பாய் இருக்க கற்றுக்கொள்;
கலங்கத்தை கொல்;
வருத்தப்படாது இருந்து கொள்;
வன்மத்தைகொல்;
அறவழி பழகிக்கொள்;
அசிங்கத்தை கொல்;
தூய்மையை கற்றுக்கொள்;
துன்பத்தை கொல்;
பார்வையில் கனிவு கொள்;
பாவம் செய்வதை கொல்;
பாசத்தில் இரக்கம் கொள்;
பருவத்தில் மோகத்தை கொல்;
நேர்மைகொள்;
நேயம் கொள்;
நன்மை கொள்;
நிதானம்கொள்;
வலிமைகொள்;
வளமைகொள்;
(மன) வலியை கொல்;
பாசம்கொள்;
நாசத்தைகொல்,
புத்தி தடுமாற்றத்தை கொல்;
புரிந்துகொள்;
புகழால் வரும் கருவத்தை கொல்;
தீமையை கொல்;
கொடும்பகை கொல்;
கொலைபாதகத்தை கொல்;
கொள் கொள் கொள்;
கற்றுக்கொள்;
காத்துக்கொள்;
பற்றுகொள்;
பழகிக்கொள்;
நல்லவனாய் இருந்து கொள்;
இல்லறம்கொள்;
இயலாமையைகொல்,
அறியாமையை கொல்;
ஆண்மை கொள்;
தீமையை கொல்;
நன்மதி கொள்
நிம்மதிகொள்;
ரௌத்திரமும் கொள்;
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
