மனிதருக்குள் எழும் சினம் 555

***மனிதருக்குள் எழும் சினம் 555 ***


இயற்க்கை...


கோடையில் வீசும் காற்று
மேனிக்கு எத்தனை சுகமளிக்கிறது...

வாடையில் வீசும் காற்று
மேனியை நடுங்க
செய்கிறது...

மழைநேரத்தில் வீசும் காற்று
மரங்களையே வேருடன் சாய்க்கிறது...

தென்றலை ரசிக்க தெரிந்த நமக்கு
சூறாவளியை ரசிப்பதில்லை...

மனிதனின்
மனமும் அப்படிதான்...

வலிக
ளை தாங்கிக்கொண்டு
மென்மையாக பேசினாலும்...

சீண்டிக்கொண்டே இருந்தால்
மென்மை
யான மனமும்...

எரிமலையாய்
ஒருநாள் வெடிக்கும்...

பழுத்த இலைகள் எல்லாம்
உதிரும் போது அழகுதான்...

இலைகள் வாழ்ந்த வடுக்கள்
மரக்கிளையில் இருக்கும்...

மனிதருக்கும் மரண
ம்
நிச்சயம் உண்டு ஒருநாள்...

புதைத்தாலும் சாம்பலானாலும்
நாமும் வாழவேண்டும் பிறர்மனதில்...

வேகமெடுக்கும் சூறாவளியை
மலைகள் தடுத்து நிறுத்தும்...

மனிதருக்குள் எழும் சினத்தை
நாமே தடுத்து கொண்டால்...

அழியாத இயற்கையை
போல நாமு
ம் வாழ்வோம்...

இந்த பூவுலகில்
இயற்கைக்கு இணையாக.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (4-Nov-22, 5:17 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 375

மேலே