உயிர் துளியே தண்ணீர்துளி 555

***உயிர் துளியே தண்ணீர்துளி 555 ***


தண்ணீர்...


புற்கள் முதல் உருவத்தில் பெரிதான
யானை வரை காற்றின்றி வாழ்வதில்லை...

பூமியில் உணவின்றி சில
நாட்கள் வாழ்ந்துவிடும் ஜீவராசிகள்...

நீரின்றி
வாழ்ந்துவிட கூடுமா பூமியில்...

கொட்டும் அருவியி
ல் நீரை
ரசிப்பதில் எத்தனை ஆனந்தம்...

குளத்தில் கல்லெறிந்து
அரைநொடி வந்து செல்லும்...

நீர்குமிழ்களை

நீங்கள் ரசித்ததுண்டா...

உடல் பிணிகொண்டாள்
உயிரை சேமித்துக்கொள்ள...

எத்தனை வழிகளை
கடைபிடிக்கிறோம்...

உலக ஜீவராசிகளை
காக்கும் நீரை சேமிக்க...

எத்தனை
வழிகளை
நாம் கடைபிடித்திருக்கிறோம்?...

கடல் நீரை
ஆவியாக சேகரித்து...

வறண்ட பூமியையும் செழிப்பாக
மாற்றுகிறது மழைத்துளிகள்...

நாம் கடல்
நீரை சேகரிக்க வேண்டாம்...

குறைந்தளவு
மழைத்துளிகளை சேகரிப்போம்...

பணத்தை சிக்கனமாக செலவழிக்க
சொல்லிக்கொடுத்த நாம்...

நீரை சிக்கனமாக செலவழிக்க
இனியாவது
சொல்லி கொடுப்போம்...

பாலைவன பயணத்தில் அறுசுவை
உணவு அருகில் இருந்தாலும்...

கண்கள்
தேடுவது நீரைத்தான்...

இனியாவது சேகரிப்போம்
உயிர்த்துளியான மழைத்துளிகளை.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (5-Nov-22, 5:17 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 2246

மேலே