சினிமா அரட்டை

தயாரிப்பாளர்: நான் எடுக்கப்போகும் படத்தை நீங்கள்தான் இயக்கவேண்டும்?
டைரக்டர்: நான் சொல்கிற பணத்தை நீங்கள் இரைத்தால் நான் படத்தை இயக்குகிறேன்.
தயாரிப்பாளர்: படத்தை தயாரித்தபின் என் வாழ்க்கையை இயக்கவும் கொஞ்சம் பணம் இருக்கும்தானே?
டைரக்டர்: ???
&&&&
தயாரிப்பாளர்: நான் தயாரிக்கவிருக்கும் புதிய படத்தில் நீங்கள் கதாநாயகியாக நடிக்கமுடியுமா?
நடிகை: எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் கந்தர்வன் என்ற நடிகரை மட்டும் ஹீரோவாகப் போடாதீர்கள்.
தயாரிப்பாளர்: ஏன்?
நடிகை: காதல் பாடல் காட்சிகள் வந்தால் அவர் அங்கங்கே நைசாக கை வைப்பவர்.
தயாரிப்பாளர்: ???
&&&&
கதாநாயகன்: நெருக்கமான காதல் காட்சிகளில் எனக்கு பதில் டூப்பை வைத்து எடுங்கள்.
தயாரிப்பாளர்: ஏன்?
கதாநாயகன்: என் நிஜவாழ்க்கையில் இந்த கதாநாயகிதான் என் மனைவி. வீட்டிலேயே ஒன்னும் பெரிசா இல்லை, அப்புறம் ஷூட்டிங்கில் என்ன பெரிய காதல் வேண்டியிருக்கிறது.
தயாரிப்பாளர்: ???
&&&&
நடிகை: சார், இந்த படத்தில் என்னை வைத்து இரண்டு கற்பழிப்பு காட்சிகள் இருக்கிறது என்றீர்களே?
டைரக்டர்: ஆமாம். அதற்கு என்ன?
நடிகை: வில்லன் நடிகர் யார்?
டைரக்டர்: பெரிய மண்ணாங்கட்டி
நடிகை: ஏன் சார் இப்படி திட்டறீங்க?
டைரக்டர்: நான் யாரையும் திட்டவில்லை. வில்லன் நடிகருடைய
பெயர் தான் 'பெரிய மண்ணாங்கட்டி'
நடிகை: அவருக்கு பதில் வேப்பங்கட்டியை போடலாமே சார்?
டைரக்டர்: வேப்பங்கட்டியை போட்டா ரொம்ப கசப்பாக இருக்குமேமா
நடிகை: அய்யே, அப்படி இல்ல சார், என்னுடைய நண்பர் ஒருவர் பேருதான் வேப்பங்கட்டி. என்னுடைய நிஜ வாழ்க்கையிலே போனவருஷம் சில
கயவானி பயல்களிடமிருந்து இவர்தான் என் கற்பை காப்பாற்றினார்.
டைரக்டர்: நீ சொல்லுவது எனக்கு புரியலாமா. வேப்பங்கட்டி உன் கற்பை காப்பாற்றினார்ன்னு சொல்லுறே. ஆனால் இப்போ படத்தில் உன் கற்பழிப்பு காட்சியில் இவரை வில்லனாக போடவேண்டும் என்கிறாயே.
நடிகை: ஆமாம் சார், இரண்டுக்கு பதில் நான்கு கற்பழிப்பு காட்சிகள் இருந்தாலும் பரவாயில்லை. என்னால் முடிந்த உதவியை நான் வேப்பங்கட்டிக்கு செய்யவேண்டும்.
டைரக்டர்: ???
&&&
கதாநாயகன்: இங்கே ஊட்டியில் எனக்கு ஒரு வீடு இருக்கிறது. ஷூட்டிங் முடிஞ்சி ஹோட்டல்ல தங்குவதற்கு பதில் நீங்க எங்க வீட்டில் வந்து இரவு தங்கலாமே?
நடிகை: ரொம்ப நல்ல மனசு சார் உங்களுக்கு. எனக்கும் வீட்டு சாப்பாடு என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் உங்க மனைவிக்குத்தான் மிகவும் சிரமம்.
கதாநாயகன்: நீங்க கவலைப்படவேண்டாம். அவங்க சென்னைக்கு போயிருக்காங்க.
நடிகை: ???
&&&&
டைரக்டர்: ஏம்பா, எவ்வளவு தடவை சொல்லுவது , பளபளன்னு ஜொலிக்கிறியே, அளஅளன்னு அளக்கறியே, கிளுகிளுன்னு மினுக்கிறியே என்று சொல்லச் சொன்னா, பலபலன்னு அலஅலன்னு கிலுகிலுன்னு உச்சரிக்கிறியே.
நடிகர்: நேத்து இரவு அந்த நடிகை என்னை பலார் என்று கன்னத்தில் அடித்ததில் உல்நாக்கில் பலமாக அடிபட்டுவிட்டது. அதான் இப்படி பேசுறேன்.
டைரக்டர்: ???
&&&
காமெடி நடிகர்: படம் முடிஞ்சி ரிலீஸ் ஆயிடிச்சு. இன்னும் பாதி பணத்தை நீங்க எனக்கு தரவில்லை. எனக்கும் ஒரு குடும்பம் இருக்கு சார்.
தயரிப்பாளர்: தயாரித்த முழு படத்திலிருந்து பாதிக்கு மேற்பட்ட காட்சிகளை சென்சாரில் வெட்டிவிட்டாங்க. இப்போது பாதி படம்தான் ரிலீஸ் ஆகி இன்டெர்வல் போதே படமும் முடிந்து விடுகிறது. அப்புறம் எப்படிப்பா உனக்கு முழு பணத்தை தரமுடியும்? உனக்காவது ஒரு குடும்பம் எனக்கு மூன்று. என்னை நெனச்சி உன்னை தேத்திக்கோப்பா.
காமெடி நடிகர்: ???
&&&
தயாரிப்பாளர்: சார் நீங்க இந்த படத்தில் கவுரவ நடிகர். இப்ப ஏன் சார் பணம் கேக்கறீங்க?
கவுரவ நடிகர்: நீ ஒண்ணுப்பா. ரெண்டுவாரமாக என் கடன்காரன் தினமும் வந்துபோகிறான். நீ பணம் கொடுத்தால்தான் நான் என்னோட கவுரவத்தை கொஞ்சமாவது காப்பாத்திக்கமுடியும்.
தயாரிப்பாளர்: ???
&&&
டைரக்டர்: என்ன சார், லேசாக கட்டிப்பிடிங்கன்னா கதாநாயகியை பலாத்காரம் செய்றமாதிரி கட்டி பிடிக்கிறீங்க? அவங்க ரொம்ப பயந்துபோய்ட்டாங்க.
கதாநாயகன்: அவங்க உடம்பில ஏதோ எண்ணெய் தடவியிருக்காங்க. லேசா பிடிச்சா வழுக்குது. அதனால்தான் என் சக்தி முழுவதையும் பிரயோகித்து அவங்களை கட்டிப்பிடிச்சேன்.
டைரக்டர்: ???
&&&
டைரக்டர்: என்னப்பா இது வம்பா போச்சு. கதாநாயகன் உன்னை நல்லா அடித்து விளாசுவதற்கு பதில் நீ அவனை போட்டு புரட்டி எடுக்கிறாய்?
வில்லன்: பின்ன என்ன சார், ஆறு மாசம் ஆச்சு. அவர் என்னிடம் வாங்கிய கடனை இன்னும் திருப்பி தரவில்லை.
டைரக்டர்: ???
&&&

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (8-Nov-22, 10:34 am)
சேர்த்தது : Ramasubramanian
Tanglish : sinimaa arattai
பார்வை : 71

மேலே